Thursday, August 12, 2021

பயணிப்பு ...

 






காயங்கள் வழியே

தினமும் பயணிப்பு

கைப்பேசிக்குள்  மனம்புதைத்த

கலியுக மாந்தர் பலர்  !

நாளிதழில் நுனிப்புல் மேய்ந்து

நாட்டு நடப்புகளில் சிலர் !

நேற்றைய நிகழ்வுகளை

நினைவில்கொண்டு....

அசையா பொம்மைகளாய் சிலர் !

விரல் விட்டு எண்ணிவிடலாம்....

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

பேசிக்கொண்டிருப்போரை !

மீண்டும் காயங்களே

நிர்ணயிக்கின்றன...

சரியத்தொடங்கும்

நாடகமேடையிலிருந்து

இறங்குவதற்கான 

நடைமேடையை.... !

இது ஒரு தொடர் வண்டிப் பயணம்...!


.........கா.ந.கல்யாணசுந்தரம்